» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பேதே இலக்கு : விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு

சனி 27, ஜனவரி 2024 11:01:22 AM (IST)

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பேதே நம் இலக்கு என்று விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் வெள்ளி விழா, திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என மும்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. ஒன்றியங்களில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுய ஆட்சி அரசையும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்த கூடாது. 

அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது. இது தான் நம் இலக்கு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அங்கு தேர்தல் கிடையாது, அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டு சிறை. இது தான் பாஜக பாணி சர்வாதிகாரம்" எனக் கூறினார்


மக்கள் கருத்து

saamyFeb 22, 2024 - 12:41:40 PM | Posted IP 172.7*****

no chance sir

INDIANSJan 30, 2024 - 06:24:42 PM | Posted IP 172.7*****

பதவிக்காக கூடிய I.N.D.I.A கூட்டணி எங்கே? காணவில்லை.....கூட்டனிஐ தேடவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory