» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்
இதுவரை நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள்!!
உடல்நல பிரச்சனைகளுக்காக நாம் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுவருவோம் ஆனால் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பலவும் எதுக்கு என்று நமக்கு தெரியாது அல்லது தவறாக புரிந்துவைத்து இருப்போம் அப்படி நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1) நரம்புஊசி
உடல்நல குறைவால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டால் நமது கையில் ஒரு ஊசியை போடுவார்கள் நம்மில் பலரும் அதை நரம்பு ஊசி என்று சொல்லுவது வழக்கும் உண்மையில் நமது உடலில் இருக்கும் எந்த நரம்பில் ஊசி போடப்படுவது கிடையாது மாறாக கையில் இருக்கும் ரத்த குழாயில் தான் ஊசி போடப்படும்.
2) குளுக்கோஸ்
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் பெரும்பாலும் எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள் என்று கூறுவார்கள் உண்மையில் நமக்கு செலுத்தப்படுவது குளுக்கோஸ் இல்லை மாறாக நமக்கு ஏற்றப்படுவது தூய்மையான 1லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் சோடியம் குளோரைடு (வீட்டில் பயன்படுத்தும் உப்பு) சேர்த்து சுத்தப்படுத்தி அதை தான் நமக்கு செலுத்துவார்கள்
3) மயக்கமருந்து
மருத்துவமனையில் நடக்கும் அணைத்து ஆபரேஷனும் மயக்க மருந்து செலுத்தப்பட்டு நடப்பது இல்லை மாறாக இடுப்புக்கு மேல் பகுதியில் நடக்கும் பெரிய அளவிலான ஆபரேஷனுக்கு மட்டுமே மயக்க மருந்து செலுத்தப்படும் மற்ற ஆபரேஷனுக்கு உடலை மரத்து போக செய்யும் மருந்து மட்டுமே கொடுக்கப்படும் இப்படி நடக்கும் ஆபரேஷனில் நோயாளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்
4) கண்தானம்
நம்மில் பலரும் கண் தானம் செய்ய எழுதி கொடுத்து இருப்போம் ஆனால் நமக்கு இருக்கும் சந்தேகம் கண்ணை முழுவதும் எடுத்து அடுத்தவருக்கு வைப்பார்கள் என்பதுதான் ஆனால் உண்மையில் அப்படி இல்லை கண்ணின் மேல்பகுதியில் இருக்கும் கார்னியா என்ற ஒரு பகுதியை மட்டுமே எடுத்து அடுத்தவர்களுக்கு வைப்பார்கள்
5) நாக்கைநீட்டு
வயிறுவலி என்று சென்றால் கூட நாக்கை நீட்டு என்று மருத்துவர் சொல்வார் அனால் நாக்கு எதுக்கு என்று தெரியாது உண்மையில் அவர் நாக்கை நீட்ட சொல்வது உள்நாக்கின் நிறத்தை பார்க்கவே நாக்கின் நிறத்தை வைத்து உடலின் எந்த பகுதியில் என்ன நோய் உண்டாகி இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம் அதற்காகத்தான் மருத்துவர் எந்த நோய் என்று சொன்னாலும் நாக்கை நீட்ட சொல்லி சொல்கிறார்.