» சினிமா » செய்திகள்
3பிஹெச்கே படத்தை ரசித்த சச்சின் : படக்குழுவினர் உற்சாகம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:33:58 PM (IST)

தனக்கு ‘3பிஹெச்கே’ படம் பிடித்திருந்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதை ஒட்டி அந்தப் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் இணையத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? சமீபத்தில் நீங்கள் ரசித்த படம் எது?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சச்சின் "நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்து ரசித்தப் படங்கள் ’3பிஹெச்கே’ மற்றும் ’ஆட்டா தம்பாய்ச் நாய்’” என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பதிலால் ‘3 பிஹெச்கே’ படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, "பலமுறை டைப் செய்து, என்ன வார்த்தைகளால் விவரிப்பது என்று தெரியவில்லை. சில வார்த்தைகளை கண்டுபிடித்து பின்பு சொல்கிறேன். ஏனென்றால் நான் இப்போது என் கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா அச்சர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘3பிஹெச்கே’. அம்ரித் ராம்நாத் இசையமைப்பில் உருவான இப்படத்தினை அருண் விஸ்வா தயாரித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன நாயகனுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:34:07 PM (IST)

அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:57:00 AM (IST)

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!
சனி 20, டிசம்பர் 2025 11:29:16 AM (IST)

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

