» சினிமா » செய்திகள்
பிரபல திரைப்பட நடிகர் மதன் பாப் காலமானார்
சனி 2, ஆகஸ்ட் 2025 9:16:01 PM (IST)
பிரபல திரைப்பட நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கடைசியாக நடித்த படம் எமன் கட்டளை. புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர்.
ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர். இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். மதன் பாப் மறைந்த தகவல் அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடசென்னை 2 விரைவில் தொடங்கும்: தனுஷ், வெற்றிமாறன் தகவல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:25:24 PM (IST)

வால்மீகி ராமாயணா திரைப்படத்திற்கு இளையராஜா இசை: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:45:45 PM (IST)

விஜய்தான் அடுத்த முதல்வர்: நட்டி நட்ராஜ் ஆதரவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:43:32 PM (IST)

ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:40:08 PM (IST)

இணையத்தில் ஜனநாயகன் படக்கசிவு: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி, சூர்யா வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 5:27:14 PM (IST)

