» சினிமா » செய்திகள்
அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

தமிழில் வெற்றிபெற்ற ‘அயோத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி, இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, புகழ் என பலர் நடித்த படம், ‘அயோத்தி’. டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். 2023-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது. ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அயோத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகச் தகவல் வெளியாகியுள்ளன. அதற்காக அவர், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, அடுத்து ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய கார்த்திக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது அவருடைய நூறாவது படம். அதையடுத்து ‘அயோத்தி’ ரீமேக்கில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)

3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)

கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)

நிவின் பாலி- நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:07:13 AM (IST)

3பிஹெச்கே படத்தை ரசித்த சச்சின் : படக்குழுவினர் உற்சாகம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:33:58 PM (IST)

விஜயகாந்த் பிறந்தநாள் : நடிகர் சங்கம் மரியாதை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:11:11 PM (IST)
