» சினிமா » செய்திகள்

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!

வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி  லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா தவிர, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோரும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory