» சினிமா » செய்திகள்
சரித்திரங்களை இன்றைய தலைமுறையினர் அறியச் செய்ய வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:27:31 PM (IST)
சரித்திரங்களையும், இதிகாசங்களையும் இன்றைய தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும் என்று சரத்குமார் பேசினார்.

இதற்கிடையில் சென்னையில் நடந்த பட விழாவில் சரத்குமார் பேசும்போது, "சரித்திரங்களையும், இதிகாசங்களையும் நாம் இப்போதைய தலைமுறையினருக்கு சொல்ல மறந்துவிடுகிறோம். இதனை தெரிந்துகொள்ள ஆர்வத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும். 'பொன்னியின் செல்வன்' நாவலை இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் அந்த படத்தை மணிரத்னம் எடுத்தார். அதுபோல தான் கண்ணப்ப நாயனாரின் கதை இப்போது 'கண்ணப்பா' என்ற படமாக தயாராகி இருக்கிறது.
பக்தி இன்றைக்கு எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. துன்பமான சூழலில் கோவில்களை நோக்கி நாம் செல்வோம். எம்மதமாக இருந்தாலும் இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை சொல்லவேண்டியதே நமக்கு கடமையாக இருக்கிறது. கால ஓட்டத்தில் பொருளாதாரத்தில் உயரும்போது மகாத்மா காந்தியையே யார் என கேள்வி கேட்கிறார்கள்.
ரசிகர்கள் எல்லா படத்தையும் பாருங்கள். அதேவேளை உங்கள் விமர்சனத்தை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். ஏனெனில் ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானது. அப்போதுதான் திரையுலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்'' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
