» சினிமா » செய்திகள்
விஜய் பிறந்தநாளில் ஜன நாயகன் அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெள்ளி 20, ஜூன் 2025 8:28:02 PM (IST)

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட்டை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026-இல் ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
விஜய் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன். 22 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் விஜய்யின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் என்பதால் படக்குழு நிதானமாகச் செயல்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
