» சினிமா » செய்திகள்
ரஜினிக்காக கூலி படத்தில் நடித்தேன்: அமீர் கான்
வியாழன் 12, ஜூன் 2025 12:45:08 PM (IST)

கூலி படத்தில் நடிக்க, நான் கதையை கேட்காமல் ரஜினிக்காக ஓகே சொன்னேன் என்று அமீர் கான் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அமீர் கான் கூலி திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர் "கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. என்னுடைய கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர்மேல் எனக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. லோகேஷ் என்னிடம் இது ரஜினி சாருடைய திரைப்படம் என கூற, நான் கதையை கேட்காமல் அவருக்கு ஓகே சொன்னேன்.எதுவாக இருந்தாலும் நான் நடிக்கிறேன்' என கூறினேன்." என கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)

3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)

கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)

நிவின் பாலி- நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:07:13 AM (IST)

3பிஹெச்கே படத்தை ரசித்த சச்சின் : படக்குழுவினர் உற்சாகம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:33:58 PM (IST)

விஜயகாந்த் பிறந்தநாள் : நடிகர் சங்கம் மரியாதை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:11:11 PM (IST)
