» சினிமா » செய்திகள்
லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸ் இணையும் பென்ஸ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
செவ்வாய் 13, மே 2025 4:09:00 PM (IST)

லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் லாரன்ஸ் உடன் நிவின் பாலி மற்றும் மாதவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கவுள்ளார். இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் இணைகிறது. லோகேஷ் கனகராஜின் கதைக்கு, திரைக்கதை - வசனம் எழுதி இயக்குகிறார் பாக்கியராஜ் கண்ணன்.
ஒளிப்பதிவாளராக கெளதம் ஜார்ஜ், இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிலோமின் ராஜ், சண்டை பயிற்சியாளராக அனல் அரசு ஆகியோர் பணிபுரியவுள்ளனர். முதல் நாளில் ராகவா லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘பென்ஸ்’ படத்தை தயாரிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)
