» சினிமா » செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

போர் பதற்றம் எதிரொலியபக கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசைவெளியீட்டு விழா மே.16ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே.16ஆம் தேதி நடைபெறவிருந்தது. அது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. இந்த விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில் நாம் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் ஒற்றுமையை தெரிவிக்க வேண்டும். இது குடிமகனாக நமது கடமையாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் படம் ஜூன்.5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory