» சினிமா » செய்திகள்
பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)
பொன்னியின் செல்வன் 2 படப் பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற "வீரா ராஜ வீரா” பாடல், தன்னுடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் "ஷிவ ஸ்துதி” பாடலை தழுவி எடுக்கப்பட்டது என்றும், இப்பாடலை பயன்படுத்தியதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்றும் பாடகர் பயாஸ் வாசிபுதீன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரதீபா சிங், ‘வீர ராஜா வீர’ பாடல் சில மாற்றங்களுடன் ‘சிவ ஸ்துதி’ பாடலின் இசையை அடிப்படையாகக் கொண்டோ அல்லது அதிலிருந்து ஈர்க்கப்பட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ.ஆர்.ரகுமான் நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.2 கோடி செலுத்தவும், மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குற்றச்சாட்டை மறுத்த ஏ.ஆர்.ரகுமான் தரப்பு, "ஷிவ ஸ்துதி” என்பது துருபத் வகையை சேர்ந்த ஒரு பாரம்பரிய இசை என்றும், "வீரா ராஜ வீரா” பாடல் இந்துஸ்தானி பாரம்பரிய இசை என்றும், காப்புரிமைக்கு உட்பட்டதல்ல என்றும் வாதிட்டது.
இதையடுத்து இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிக்கு ரவிசங்கர் மற்றும் அஜய் திக்பால் ஆகியோர் அமைராவில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி விதித்த ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)
