» சினிமா » செய்திகள்

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

"மோடி தேவையில்லை என்றார் வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். இன்னும் 20 ஆண்டுகள் அவர் இந்தியாவை ஆள வேண்டும்" என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களின் பெயர்களை எழுதுங்கள். மவுண்ட் பேட்டன் காலத்தில் இருந்து அவர்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள். மற்றொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். அப்போது வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள்.

1988-ம் ஆண்டு நான் முதன்முதலில் காசிக்கு சென்றபோது அது சிறுநீர் கழிக்கும் இடம்போல காட்சியளிக்கும். ஆனால், இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. இதை யார் செய்தது. கங்கை நதி மிகவும் சுத்தமாக நீர். அதில் மக்கள் அசுத்தங்களை செய்துகொண்டிருந்தனர்.

மோடிதான் சரியான திட்டமிடலுடன் அதனை சரி செய்தார். இன்னும் அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. நாட்டின் மீது பற்று இல்லாத ஒருவரால் இதை செய்யவே முடியாது. நான் முன்பே சொன்னதுபோல மற்ற பிரதமர்கள் செய்ததையும் மோடி செய்ததையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் புரியும்.

ஒரு வேளை நமக்கு மோடி தேவையில்லை என்றால், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி யாராது இருக்கிறார்களா?. இன்னும் 20 ஆண்டுகள் அவர் இந்தியாவை ஆள வேண்டும்' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory