» சினிமா » செய்திகள்

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)



இந்தியர்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்று பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் வலியுறுத்தினார். 

புது டெல்லியில் நேற்று (ஏப். 28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். 

பின்னர் அவர் அளித்த பேட்டியில், "பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர்களுடன் நான் துணை நிற்கிறேன். இதுபோன்ற செயல்கள் இனிமேல் நிகழாது என்று நம்புகிறேன். ஒரு நாள் நாம் ஒருவருக்கொருவரை புரிந்துகொண்டு இரக்கத்துடன் நடந்து கொள்வோம் என்பதற்காக பிரார்த்திப்போம். நம்மிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையான, ஒரே சமூகமாக வாழ்வோம்” என்று பேசியுள்ளார்.

”ராணுவத்தைச் சேர்ந்த பலரை சந்தித்தேன். நாம் அவர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் இங்கே நிம்மதியாக உறங்கி ஓய்வெடுக்க, அவர்கள் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் அழகானதொரு வாழ்க்கை அமைய பிரார்த்திக்கிறேன், வாழ்த்துகிறேன்.

எல்லைகளில் ஓய்வின்றி அவர்கள் சேவையாற்றுகிறார்கள். இதற்காகவே, அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, நாம் நமது தேசத்துக்குள், இங்கே ஒருவருக்கொருவரை மதித்து நடந்து கொள்வதும், ஒவ்வொரு மதத்தையும் மதிப்பதும், அதேபோல ஒவ்வொரு சாதிக்கும் மதிப்பளிப்பதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், அமைதியானதொரு சமூகமாக திகழ வேண்டும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory