» சினிமா » செய்திகள்
ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)

வேட்டையன் படத்திற்கு பின்னர், ‘ஜெயிலர் 2’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஃபகத் ஃபாசில்.
நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30% காட்சிகளை முடித்துவிட்டது படக்குழு. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா என முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.
தற்போது இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினி – ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. முன்னதாக இருவரும் ‘வேட்டையன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஜெயிலர்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால், இதன் 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கி இருக்கிறது. இதனை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

