» சினிமா » செய்திகள்
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
வியாழன் 27, நவம்பர் 2025 12:18:37 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர் - 2’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜெயிலர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ரூ.525 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியடைந்த நிலையில் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், கோவாவில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

வெறுப்புப் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ்
வியாழன் 8, ஜனவரி 2026 4:11:15 PM (IST)

துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் முடிந்தது : கவுதம் மேனன் தகவல்
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:42:26 PM (IST)

