» சினிமா » செய்திகள்

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம்

வியாழன் 17, ஏப்ரல் 2025 10:33:32 AM (IST)



விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று வசி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நெருங்கிய சுற்றத்தினர் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் நேற்று மாலை வெளியான பின்னரே இது குறித்து பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வசி ஒரு பிரபல டி.ஜே. (DJ) மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவன உரிமையாளர். பெரிய திருமணங்கள், பார்ட்டிகள், மற்றும் கிளப்புகளுக்கு டி.ஜே.யாக பாடல் நிகழ்ச்சிகளை நடத்துபவர் என செய்திகள் தெரிவிக்கின்றன. பிரியங்காவின் திருமண நிகழ்வில் பிக் பாஸ் பிரபலங்கள் நிரூப், அமீர், பாவனி, அன்ஷிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, பிரியங்கா விஜய் டிவியில் நுழைவதற்கு முன்னர், சன் டிவி, ஜீ தமிழ், சுட்டி டிவி, சன் மியூசிக் என்று பல டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். பின்னர் விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் எதிர்பார்த்தபடி அவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லவில்லை. இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். ஆனால் பொதுவெளியில் இது குறித்து எப்போதும் பிரியங்கா பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், பிரியங்கா, வசியை மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார். இருவருக்குள்ளும் காதல் ஏற்படவே தற்போது வசியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory