» சினிமா » செய்திகள்
ரஜினியின் கூலி ஆக.14ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:31:30 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியானது.
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் செளபின் ஷாயிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அதுமட்டுமின்றி, நடிகர் அமீர் கான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்த நிலையில் படத்தின் வெளியீடு மற்றும் டீசர் பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பமாகவே ரசிக்கும் திரைப்படம் கேங்கர்ஸ் : வடிவேலு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:16:45 PM (IST)

சபரிமலை கோவிலில் கார்த்தி, ரவி மோகன் தரிசனம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:11:27 PM (IST)

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:33:32 AM (IST)

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவராஜ்குமார்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:11:19 PM (IST)

இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல் : பிரபல நடிகை கைது!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:54:30 PM (IST)

குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:03:32 PM (IST)
