» சினிமா » செய்திகள்
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் டிரெய்லர் வெளியானது
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:48:24 PM (IST)
15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வின்னர் படத்தின் கைப்புள்ள, தலைநகரம் படத்தின் நாய் சேகர், நகரம் மறுப்பக்கம் படத்தின் ஸ்டைல் பாண்டி கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிக்க கூடியவை.
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு 'கேங்கர்ஸ்' படத்தில் நடித்துள்ளார். 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இப்படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர். "கேங்கர்ஸ்" படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)
