» சினிமா » செய்திகள்

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது

செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)



நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கி உள்ளது.

ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ‘ஜெயிலர்’ 2-ம் பாகத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் ‘ஜெயிலர்’ முதல் பாகம் படம் 2023-ல் வெளியாகி ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. ஜெயிலர் இரண்டாம் பாகமும் உருவாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். 

இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரத்தக்கறை சட்டை அணிந்த நிலையில் இருக்கும் ரஜினிகாந்தின் தோற்றத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன், மிர்னா மோகன் ஆகியோரும் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளனர். 

மேலும் புதிய வில்லன் நடிகர்கள் இதில் நடிக்கலாம் என்று தெரிகிறது. சென்னையில் இரண்டு வாரங்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்றும், இதில் ரஜினியும் மற்ற நடிகர்களும் பங்கேற்று நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory