» சினிமா » செய்திகள்
மதம் மாறியது ஏன்? நடிகை ரெஜினா விளக்கம்!
செவ்வாய் 31, டிசம்பர் 2024 12:49:30 PM (IST)
இஸ்லாமியராகவே வளர்ந்த நான், பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினேன் என நடிகை ரெஜினா தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இறுதியாக, நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் படங்களில் நடித்திருந்தார். தற்போது, விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரெஜினா தான் மதம் மாறியது ஏன் என்பது குறித்து பேசினார்.
அதில், "என் தந்தை இஸ்லாமியர். என் அம்மா கிறிஸ்துவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நான் இஸ்லாமியராகவே வளர்ந்தேன். பின், பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதால் ரெஜினாவாக இருந்தா நான் கேசண்ட்ராவை இணைத்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினேன். அதற்கான, கிறிஸ்துவ தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றேன்” எனத் தெரிவித்தார்.