» சினிமா » செய்திகள்
அஜித்துடன் சிறுத்தை சிவா இணைகிறார்: ஞானவேல் ராஜா தகவல்!
வெள்ளி 15, நவம்பர் 2024 4:04:36 PM (IST)
இயக்குநர் 'சிறுத்தை' சிவா அடுத்ததாக அஜித்துடன் இணைகிறார் என திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெலுங்கு ஊடகத்தினரிடம் கூறுகையில், "அடுத்து இயக்குநர் சிவா அஜித்தை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும். அதன் பிறகு ‘கங்குவா’ 2-ம் பாகத்துக்கான பணிகள் தொடங்கும். ‘கங்குவா 2’ மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது” என்றார். மேலும் ‘கங்குவா’வில் இரைச்சல் அதிகமாக இருப்பது குறித்து அவர் பேசுகையில், "சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.அனைத்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் பேசி, 2 பாயின்ட் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளேன். இது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தவறல்ல. மாறாக, சவுண்ட் மிக்ஸிங்கில் ஏற்பட்ட சிக்கல். முதல் நாளில் கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ‘தேவரா’ படத்துக்கு கூட இது நிகழ்ந்தது. அடுத்தடுத்த நாட்களில் இது மாறும் என நம்புகிறேன். வார இறுதியில் வசூல் அதிகரிக்கும். சூர்யாவின் திரையுலகில் அதிக வசூல் ஈட்டிய படமாக இது இருக்கும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

