» சினிமா » செய்திகள்
கமல்ஹாசனின் தக் லைப் படத்தின் ரிலீஸ் டீஸர் வெளியீடு!
வெள்ளி 8, நவம்பர் 2024 10:09:34 AM (IST)

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தக் லைப் படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் திரிஷா ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்தநிலையில், கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தக் லைப் படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பின்வாங்கியது தனுஷின் இட்லி கடை : அக்.1ல் ரிலீஸ்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:03:45 PM (IST)

வடிவேலு - ஃபஹத் ஃபாசிலின் ‘மாரீசன்’ ஜூலை ரிலீஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 3:38:10 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் டிரெய்லர் வெளியானது
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:48:24 PM (IST)

ஜன நாயகன் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விற்பனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:05:58 PM (IST)

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் - வேல்முருகன்
திங்கள் 31, மார்ச் 2025 8:35:45 PM (IST)

பாெங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் - விஜய் படங்கள் மோதல்?
செவ்வாய் 25, மார்ச் 2025 3:50:05 PM (IST)
