» சினிமா » செய்திகள்

ரஜினியின் 'வேட்டையன்' அக்.10ல் ரிலீஸ்!

திங்கள் 19, ஆகஸ்ட் 2024 11:59:08 AM (IST)



த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின்' ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளவர் ரஜினிகாந்த். இவர் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

மேலும், இப்படத்தில் ரஜினியுடன், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இன்று வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

முன்னதாக, அதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.   மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory