» சினிமா » செய்திகள்

மெல்போர்ன் திரைப்பட விழாவில் மகாராஜா இயக்குநருக்கு விருது!

சனி 17, ஆகஸ்ட் 2024 12:35:04 PM (IST)



மெல்போரினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் மகாராஜா திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.

இந்நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், மகாராஜா திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. விழாவின் சிறந்த இயக்குநருக்கான விருது பட்டியலில், இம்தியாஸ் அலி, கபீர் கான், கரண் ஜோஹர், நித்திலன் சாமிநாதன், ராஜ்குமார் ஹிரானி, ராகுல் சதாசிவன், விது வினோத் சோப்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதிகப்படியான விருப்பத் தேர்வாக மகாராஜா தேர்வானதால், நித்திலன் சாமிநாதன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்; கபீர் கானும் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory