» சினிமா » செய்திகள்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகர் ரஜினிகாந்தின் காலா!

வெள்ளி 21, ஜூன் 2024 3:39:00 PM (IST)



21-ம் நூற்றாண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் ‘காலா’ பெற்றுள்ளது. 

கடந்த 2018-ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காலா’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படத்துக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ‘பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்’ (British Film Institute) நிறுவனம் ‘Sight and Sound’ என்ற பிரபலமான மாத இதழை வெளியிட்டு வருகிறது.

இந்த இதழில், உலகம் முழுவதும் வெளியான இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘ஓல்டு பாய்’, ‘கெட் அவுட்’, ‘ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ்’, ‘அனாடமி ஆஃப் ஹெல்’ உள்ளிட்ட 25 படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் பா.ரஞ்சித்தின் ‘காலா’ திரைப்படமும் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இது தொடர்பாக BFI-ன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், "21-ம் நூற்றாண்டின் கால்வாசியை நாம் கடந்துவிட்டோம்.

இந்த மைல்கல்லை அங்கீகரிப்பதற்காக, சிறந்த விமர்சகர்கள் 25 பேரின் உதவியைக் கொண்டு திரையுலக சகாப்தத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படங்களை பரிந்துரைக்க கோரினோம். எதிர்காலத்தை கடந்தும் பேசப்படக்கூடிய, 2000 முதல் 2024 வரையில் பரவலான கவனம் பெற்ற படங்களை பட்டியலிட கோரினோம். அதன்படி இந்தப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு படம் என்ற ரீதியில் 25 படங்களை தேர்ந்தெடுத்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory