» சினிமா » திரை விமர்சனம்
கார்த்தி நடித்துள்ள சுல்தான் படித்தின் விமர்சனம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 8:50:15 AM (IST)
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் சுல்தான். மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய படமாக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பாக்கியராஜ் கண்ணன், ஏற்கனவே ரெமோ என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்.
அதுமட்டுமில்லாமல் முதன்முதலாக சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரஷ்மிகா மந்தனா அறிமுகமாகியுள்ளார். பக்கா கமர்சியல் படமாக வெளிவந்திருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த அடுத்த படமாக கண்டிப்பாக சுல்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு, அபிராமி, நவாப் ஷா, கேஜிஎஃப் ராம், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி, மாரிமுத்து, சென்ராயன், விக்ரமாதித்ய தாத்தா, சாந்தி, ஹரிஷ் பேராடி, சுக்விந்தர் சிங், காமராஜ், பிரின்ஸ், காளையன், பிரபு, சரத், ரமா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சத்யன், சூர்யன், இசை-விவேக் மெர்வின், எடிட்டிங்-ரூபன், கலை-ஜெயசந்திரன், சண்டை-திலீப் சுப்ராயன், பாடல்கள்-விவேகா, தனிக்கொடி, நடனம்- பிருந்தா, ஷோபி, தினேஷ்,கல்யாண், வசனம்-ஹரிஹரசுதன் தங்கவேலு, உடை-பெருமாள் செல்வம், ஒப்பனை-ஏர்போர்ட் ராஜா, தயாரிப்பு மேற்பார்வை-பி.எஸ்.ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு-அரவிந்த்ராஜ் பாஸ்கரன், கிரியேடிவ் புரொடியூசர்-தங்க பிரபாகரன்.ஆர், பிஆர்ஒ-ஜான்சன்.
தாதா நெப்போலியன் மற்றும் லால் அடியாட்கள் நூறு பேரை வைத்து சென்னையில் கட்ட பஞ்சாயத்து, அடிதடி என்று பிரபல ரவுடியாக வலம் வருகின்றனர். நெப்போலியனின் மகன் கார்த்தி இவர்களுடன் வளர்ந்து மும்பையில் ரோபோடிக் துறையில் படித்து பட்டம் பெற்று வேலை செய்ய விடுமுறைக்கு சென்னை வீட்டிற்கு வருகிறார். அந்த சமயத்தில் என்கவுண்டரில் நெப்போலியன் இறந்து விட, அண்ணன்களாக கருதும் நூறு பேரையும் போலீசிடமிருந்து காப்பாற்றும் பெரிய பொறுப்பை கார்த்தி ஏற்கிறார். இவர்களை நல்வழிப்படுத்தி ரவுடி தொழிலை விட்டு விட ஆறு மாதம் அவகாசம் கேட்டு கார்த்தி கமிஷனரிடம் சம்மதம் பெறுகிறார்.
அதே சமயம் தந்தை நெப்போலியன் இறக்கும் போது சேலத்தில் உள்ள கிராமத்தை கார்ப்ரேட் கம்பெனி ஆட்கள் ரவுடி கும்பலை வைத்து நிலத்தை அபகரிக்க அராஜகம் செய்வதை தடுத்து நிறுத்த அந்த ஊர் மக்களிடம் வாக்கு கொடுத்ததை நிறைவேற்றும் பொறுப்பும் இருக்க நூறு அடியாட்களுடன் செல்கிறார். அங்கே ராஷ்மிகாவுடன் காதல் மலர, அந்த கிராமத்திலேயே தங்கி விடுகிறார். நூறு பேரையும் அடிதடியில் இறங்காமல் இருக்க பல வழிகளில் தடுத்து நிறுத்தி, அட்டகாசம் செய்யும் கார்ப்ரேட் ரவுடி கும்பலை தனி ஆளாக நின்று அடித்து துரத்தி விடுகிறார்.
நூறு பேரையும் விவசாயத்தில் ஈடுபடுத்தி நல்வழிப்படுத்த முயல்கிறார். இருந்தாலும் கார்ப்பரேட் முதலாளியின் தொல்லை தொடர, எவ்வாறு அந்த கிராமத்தை காப்பாற்றினார்? தன்னை நம்பி வந்த அடியாட்களை நல்வழிப்படுத்தி படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை. கார்த்தி சுல்தானாக படம் முழுவதும் நூறு பேர் படை சூழ வலம் வந்து அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசானாக, நல்ல தம்பியாக படம் முழுவதும் காதல், மோதலுடன் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக களமிறங்கி நச்சென்று நடித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக, காதலியாக சிறப்பாக துள்ளலுடன் நடித்துள்ளார். இவருடன் கார்த்தியின் தந்தையாக நெப்போலியன், மாமாவாக லால், யோகிபாபு, அம்மாவாக அபிராமி, வில்லனாக நவாப் ஷா, கேஜிஎஃப் ராம், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி, மாரிமுத்து, சென்ராயன், விக்ரமாதித்யா தாத்தா, சாந்தி, ஹரிஷ் பேராடி, சுக்விந்தர் சிங், காமராஜ், பிரின்ஸ், காளையன், பிரபு, சரத் என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளத்துடன் வாட்ட சாட்டமாக அடியாட்கள் நூறு பேர் இவர்களுடன் வலம் வந்து அதகளம் செய்கின்றனர்.
சத்யன், சூர்யன் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்ட காட்சிகளின் வர்ண ஜாலங்களை நம் கண் முன்னே விரிவாக கொடுத்து காட்சிக் கோணங்களில் அட்டகாசமாக கொடுத்திருக்கிறார்.விவேக் மெர்வின் இசை படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்ததோடு, பின்னணி இசையில் அசத்தி விடுகின்றனர்.
எழுத்து, இயக்கம்- பாக்யராஜ் கண்ணன். பல படங்களின் கலவையாக வந்தாலும் சுல்தான் கார்த்தியின் நடிப்பில் வித்தியாசமான, பிரம்மாண்டமான படைப்பில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து சொல்லியிருக்கும் விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். தன் தந்தையின் வாக்கையும் காப்பாற்ற வேண்டும், நூறு பேரையும் நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும் அது சாத்தியப்படுமா என்ற சூழலில் இறுதி வரை போராட்ட களமாகவே திரைக்கதையை கொண்டு வந்து க்ளைமேக்சில் திருப்திகரமான முடிவோடு முடித்து பாராட்டுக்கள் பெறுகிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். மொத்தத்தில் சுல்தான் அனைவரையும் ஆக்ஷன் கவர்ந்த மசாலா