» சினிமா » திரை விமர்சனம்

தேர்தல் சீசனுக்கு பொருத்தமான படம் : மண்டேலா - சினிமா விமர்சனம்

வியாழன் 15, ஏப்ரல் 2021 8:26:14 AM (IST)சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போல் வெளியாகி உள்ளது. மண்டேலா. இந்த படத்தில் யோகி பாபு, சங்கிலி முருகன், ஷீலா உள்ளிட்ட பலர் டித்துள்ளனர். இயக்கம் மடோன். இசை அஷ்வின். 

சூரங்குடி கிராமத்தில் வடக்கூர், தெக்கூர் என்று 2 கோஷ்டிகள் எதிரும் புதிருமாக எல்லா பிரச்சினைகளுக்கும் அடித்துக் கொள்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஊர் தலைவர் சங்கிலி முருகன் வடக்கூரில் ஒன்று, தெக்கூரில் ஒன்று என 2 பெண்களை திருமணம் செய்தும், அவருடைய நம்பிக்கை வெற்றி பெறவில்லை. 

இரண்டு மனைவிகளின் மூலம் பிறந்த 2 மகன்களும் ஆளுக்கொரு கோஷ்டிக்கு தலைமை தாங்குகிறார்கள். ஊருக்கு நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் ஒரு திறந்தவெளி சலூன். அதை நடத்துபவர், யோகி பாபு. அவரை ஊர் மக்கள் அனைவரும் ‘இளிச்சவாயா’ என்றே அழைக்கிறார்கள். இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் வருகிறது. தலைவர் பதவிக்கு சங்கிலி முருகனின் 2 மகன்களும் போட்டியிடுகிறார்கள். ‘இளிச்சவாயன்’ (யோகி பாபு) ஓட்டு யாருக்கு? என்ற கேள்வி எழுகிறது. அது ஒரு பெரும் பிரச்சினையாக, விவகாரமாக மாறுகிறது. 

யோகி பாபுவை போட்டுத்தள்ளுவது என்று இரண்டு கோஷ்டியினரும் முடிவு செய்கிறார்கள். அதில் இருந்து அவர் தப்பினாரா, இல்லையா? என்பது உச்சக்கட்ட காட்சி.யோகி பாபுவுக்காகவே எழுதப்பட்ட கதை. உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதை உள்வாங்கி அவர் நடித்து இருக்கிறார்.ஊர் தலைவராக சங்கிலி முருகன், அவருடைய மகன்களாக ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி, தபால் அதிகாரியாக சீலா ராஜ்குமார் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவும், பரத் சங்கரின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். மடோன் அஷ்வின் டைரக்டு செய்து இருக்கிறார். காதல், டூயட் இல்லாத ஜீவனுள்ள கதை, கிராமத்து யதார்த்தங்களுடன் திரைக்கதை, நெல்லை தமிழ் மணக்கும் இயல்பான வசனம் என எல்லா அம்சங்களும் பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற செய்கின்றன. படத்தின் ஒரே மைனஸ், வேக குறைவு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory