» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியா அரையிறுதி சுற்றுக்கு செல்லாது : முன்னாள் பாகிஸ்தான் வீரர் கணிப்பு
சனி 21, பிப்ரவரி 2026 11:16:54 AM (IST)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி செல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆமிர் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது. நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆமிர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் போட்டிகளை பார்க்கும் போது அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:57:09 PM (IST)

நாக் அவுட் போட்டிகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள்: இந்திய அணிக்கு மெக்ரா அறிவுரை!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:34:58 PM (IST)

டி20 உலகக் கோப்பை: சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் - அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
திங்கள் 2, மார்ச் 2026 10:24:57 AM (IST)

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்தியா: 256 ரன்கள் குவித்து அபார வெற்றி!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 10:41:35 AM (IST)

டி20 உலகக்கோப்பையில் ஹாரி புரூக் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, பிப்ரவரி 2026 10:23:25 AM (IST)

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு - தென்னாப்பிரிக்க அணியின் கையில்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:08:04 PM (IST)

