» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி யு19 மகளிர் உலகக்கோப்பை சாம்பியன்: இந்திய மகளிர் அணி சாதனை!

ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:09:32 PM (IST)



ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக வான் வூர்ஸ்ட் 23, ஜெம்மா போத்தா 16 ரன்களை எடுத்தனர். இந்திய ஸ்பின்னர்கள் அசத்தலாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அபாரமாக பந்துவீசிய கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகள் எடுத்தார். 83 ரன்களை இலக்காக களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் அசத்திய கொங்கடி த்ரிஷா பேட்டிங்கிலும் முத்திரை பதித்தார். அவர் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சானிகா சால்கேவும் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். நடப்பு சாம்பியனான இந்தியா தொடர்ந்து 2அவது முறையாக யு19 டி20 மகளிர் உலக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory