» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹர்திக், சிவம் துபே அதிரடி: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!

சனி 1, பிப்ரவரி 2025 11:14:53 AM (IST)



இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4வது போட்டி புனே எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், அபிஷேக் சர்மா 29 ரன், ரிங்கு சிங் 30 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, சிவம் துபே ஜோடி அதிரடியாக ரன்களை குவித்து அரை சதத்தை கடந்தனர். ஹர்திக் பாண்டியா 53 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), சிவம் துபே 53 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. இங்கிலாந்து பந்து வீச்சில் சாகிப் மஹ்மூத் 3, ஆதில் ரஷ்த் மற்றும் ஆர்ச்சர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

182 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 166 எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக புரூக் 59 ரன், பென் டக்கட் 39 ரன் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் ரவி பிஷ்னாய் 3, ஹர்ஷித் ரானா, வரும் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்று 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory