» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

செவ்வாய் 24, டிசம்பர் 2024 8:10:04 PM (IST)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை ஐசிசி இன்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதுமாக பாகிஸ்தானில் நடத்தப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாத காரணத்தினால், இந்திய அணியின் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது. ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் இறங்கி வந்திருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் விளையாடுவதற்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 8 அணிகள் ஏ, பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் தகுதி பெறவில்லை. இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் பிப்ரவரி 20ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராகவும், பிப்ரவரி 23ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மார்ச் 2ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் மோதுகிறது.

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை
  • பாகிஸ்தான்-நியூசிலாந்து (கராச்சி – பிப்ரவரி 19)
  • இந்தியா-பங்களாதேஷ் (துபாய் – பிப்ரவரி 20)
  • ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா (கராச்சி – பிப்ரவரி 21)
  • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து (லாகூர் பிப்ரவரி 22)
  • இந்தியா-பாகிஸ்தான் (துபாய் – பிப்ரவரி 23)
  • பங்களாதேஷ்-நியூசிலாந்து (ராவல்பிண்டி – பிப்ரவரி 24)
  • ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி – பிப்ரவரி 25)
  • ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து (லாகூர் – பிப்ரவரி 26)
  • பாகிஸ்தான்-பங்களாதேஷ் (ராவல்பிண்டி – பிப்ரவரி 27)
  • ஆப்கானிஸ்தான்-ஆஸ்திரேலியா (லாகூர் – பிப்ரவரி 28)
  • இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா (கராச்சி – மார்ச் 1)
  • இந்தியா-நியூசிலாந்து (துபாய் – மார்ச் 2)
  • முதல் அரையிறுதி (மார்ச் 4 – துபாய் அல்லது கராச்சி)
  • இரண்டாவது அரையிறுதி (மார்ச் 5 – துபாய் அல்லது லாகூர்)
  • இறுதிப்போட்டி (மார்ச் 9 – துபாய் அல்லது லாகூர்)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory