» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தலை இல்லாத மனித எலும்புக்கூடு சிக்கிய வழக்கின் விசாரணையில், கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் பெரிய அண்டாவில் மைதா மாவுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித சதைப் பகுதிகளைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
சென்னையிலிருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிமைகோரப்படாத நிலையில் கிடந்த டிராலி சூட்கேஸை ஆக்ரா ரயில்வே காவல்துறையினர் கடந்த 5-ஆம் தேதி திறந்து பார்த்தனர். அந்த சூட்கேஸில் தலை இல்லாத மனித எலும்புக்கூடு மற்றும் சில உடல் உறுப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சூட்கேஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏற்றப்பட்டது தெரியவந்தது. சூட்கேஸை வைத்த நபர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கியதைச் சிசிடிவி காட்சிகள் உறுதிசெய்தன.
காவல்துறையினர் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின: அங்கு இருந்த பெரிய அண்டாவில் மைதா மாவுடன் கலந்த நிலையில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித சதைப் பகுதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரயிலில் சிக்கிய எலும்புக்கூடு மற்றும் இந்தச் சதைப் பகுதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடையாளம் காணல்: உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா (38) என்பவராக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தத் தடயவியல் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஹயாத் நிஷாவுடன் கடந்த 2 மாதங்களாக ஒரே வீட்டில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி தற்போது தலைமறைவாகியுள்ளனர். சந்தேகத்திற்குரிய அந்தத் தம்பதியைப் பிடிக்க அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்குத் தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டறியும் பணியும், கொலைக்கான காரணம் நகைகளுக்காகவா அல்லது தகாத உறவு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)



தமிழன்Aug 27, 2026 - 10:13:12 AM | Posted IP 162.1*****