» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கத் தடை — தமிழக கல்வித்துறை உத்தரவு!
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:00:46 PM (IST)
இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசு கடிதத்தின் அடிப்படையில்: இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் ஜனதா கட்சி ஆகியவை நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்களின் பங்கேற்பைத் தடுக்க உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தை உடனடியாக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)

விக்சித் பாரத் 2047: கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உருவாக்கிய கல்விக்கொடி & லோகோ!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:03:37 PM (IST)


