» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்: உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:40:55 PM (IST)
கர்நாடக மாநிலக் காவிரி வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலை வேட்டையாட முயன்றதாகக் கூறி, கர்நாடக வனத்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அனூர் தாலுகாவில் வசித்து வந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் தெரிவித்ததாவது: "காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்தச் கொடூரமான படுகொலையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்."
சுய பாதுகாப்பிற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கர்நாடக வனத்துறை அளித்துள்ள விளக்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என முதல்வர் நிராகரித்துள்ளார். இச்சம்பவம் குறித்து நேர்மையான மற்றும் நடுநிலையான உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிரிழப்பிற்குக் காரணமான வனத்துறை அதிகாரிகள் மற்றும் தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கர்நாடக அரசு உரிய நிதி உதவியும் அனைத்து ஆதரவுகளையும் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கர்நாடக வனத்துறையின் இந்தச் செயல் குறித்துத் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:16:08 PM (IST)

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:43:13 PM (IST)

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:40:26 PM (IST)

பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் : தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

அமைச்சர் பேசியதற்கு மன்னிப்பு காேரிய முதல்வர் விஜய் : சட்டப்பேரவையில் பரபரப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:20:18 PM (IST)

தேசியக் கொடியேற்றியபோது பலியான கணவர் : நஷ்டஈடு கோரி மூதாட்டி 50 ஆண்டுகால போராட்டம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 12:49:47 PM (IST)


