» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:40:26 PM (IST)

"தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே இந்த தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ‘100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில் முதல்வர் விஜய் பேசியதாவது: "சி.ஜோசப் விஜய் என்னும் நான்... எல்லோரும் சேர்ந்து ஒரு பிரெஷ்ஷான புதிய ஆட்சியைக் கொடுப்போம். இது ஒரு புதிய தொடக்கம், புதிய சகாப்தம். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பஸ் வசதி ஆகியவற்றில் தான் எனது முழு கவனமும் இருக்கும். 8 கோடி மக்களும் என் மக்கள்தான்; நம்பிக்கையாக இருங்கள்."
வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் திட்டங்கள்:
200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை & சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை
‘அண்ணன் சீர்’ (8 கிராம் தங்க நாணயம் + பட்டுப்புடவை) & தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் & வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள்
வெற்றி வீடு திட்டம்
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 (ரூ.1 லட்சம் கோடி முதலீடு)
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
அரசின் இந்த வீடியோ விளம்பரத்தைக் கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில்: "கடந்த 100 நாள் தவெக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை; புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவும்படவில்லை. தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே இந்த 100 நாள் ஆட்சியின் ஒரே சாதனை."என்று குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்: உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:40:55 PM (IST)

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:16:08 PM (IST)

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:43:13 PM (IST)

பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் : தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

அமைச்சர் பேசியதற்கு மன்னிப்பு காேரிய முதல்வர் விஜய் : சட்டப்பேரவையில் பரபரப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:20:18 PM (IST)

தேசியக் கொடியேற்றியபோது பலியான கணவர் : நஷ்டஈடு கோரி மூதாட்டி 50 ஆண்டுகால போராட்டம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 12:49:47 PM (IST)


