» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:50:02 AM (IST)
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், ஆடி அமாவாசையான இன்று (ஆகஸ்ட் 11) பக்தர்கள் மலையேறவும் கோயிலுக்குச் செல்லவும் அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்திற்குட்பட்ட சதுரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று (10.08.2026) திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்தத் தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று (11.08.2026) நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்குச் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கான அதிகாரப்பூர்வ தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:37:31 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்கத் தடை: விநியோகம் அதிரடி முடக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:55:49 PM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.650 கோடியில் ஏவுகலன் மையம்: முதல்வர் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி ஒப்பந்தம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:40:56 AM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)


