» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழ்நாடு முதலமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரித் தாக்கல் செய்திருந்த மனுவை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார்.
லண்டனில் இருந்து 'வீடியோ கான்ஃபரன்ஸ்' மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், வழக்கைத் தொடர விருப்பமில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கைச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் முடித்து வைத்தது.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சங்கீதா விவாகரத்து கோரிச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இருவரும் நேரில் ஆஜராகாமல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரப்பட்டிருந்தது. தொடர்ந்து கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தி விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்திருந்தது.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் முதலமைச்சர் விஜய் நேரில் ஆஜராக இயலவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், லண்டனில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக விசாரணையில் பங்கேற்ற சங்கீதா, விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:28:31 AM (IST)

வீடு புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பள்ளி வேன் டிரைவர் சிறையில் அடைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:19:56 AM (IST)

தூத்துக்குடி தனசேகர் நகரில் டாஸ்மாக் தொல்லை: மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:45:15 AM (IST)

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)


