» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)
நெல்லையில் வரதட்சணை மற்றும் குடும்பக் கொடுமை காரணமாகப் திருமணமான ஒரு ஆண்டிலேயே பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவரான கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாயாரைச் சந்திப்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அரியகுளம் கிராமம் தெய்வநாயகப்பேரியைச் சேர்ந்தவர் குமார் (61). இவருடைய மகள் சுமதி (31). இவருக்கும் நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் வெங்கடேஷ் (37) என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வெங்கடேஷ் நெல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு சுமதி தனது கணவர் வீட்டில் திடீரென விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், திருமணமான சில களிலேயே பெண் உயிரிழந்ததால் உதவி ஆட்சியர் (RDO) விசாரணையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சுமதியின் தந்தை குமார் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் அளித்த விரிவான புகாரில் கூறியிருந்ததாவது: "சுமதியைத் திருமணம் செய்து கொடுக்கும்போது போதுமான ரொக்கப் பணம் மற்றும் நகைகளைச் சீர்வரிசையாகக் கொடுத்தோம். ஆனால், திருமணம் முடிந்த நாள் முதலே எனது மகளுக்கும், அவரது மாமியார் தங்கத்திற்கும் (60) இடையே மனக்கசப்பு ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கணவர் வெங்கடேஷும், மாமியார் தங்கமும் சேர்ந்து சுமதியைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தொலைபேசியில் கூடப் பேசக்கூடாது எனக் கடும் நெருக்கடிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, வேறு வழியின்றி விஷம் குடித்து உயிரிழந்துள்ளார். எனவே எனது மகளின் தற்கொலைக்குக் காரணமான அவரது கணவர் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."
புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் உதவி ஆட்சியர் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில், கணவர் மற்றும் மாமியாரின் தொடர் கொடுமையாலேயே சுமதி தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கல்லூரிப் பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் அவரது தாய் தங்கம் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை!
வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)

காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நிதி மடைமாற்றம்: டிடிவி தினகரன் கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 5:13:34 PM (IST)

நீரோவின் ஆட்சி போல் தவெக அரசு செயல்படுகிறது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:39:43 PM (IST)


