» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு

செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜுலை 2026-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.07.2026 அன்று 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள். எனவே, விவசாயிகள் குறைதீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன்தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory