» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்னணு கழிவுகளை சேகரிக்கப் புதிய திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!

சனி 11, ஜூலை 2026 10:13:15 AM (IST)

ewastKanimozhi.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு கழிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து சேகரித்து மறுசுழற்சி செய்யும் நோக்குடன், 'பாரி - ஈ பின்' என்ற புதிய அமைப்பையும் அதன் பிரத்தியேக இணையதளத்தையும் கனிமொழி எம்பி தொடங்கி வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகக் கனிமொழி எம்பி முன்னெடுத்த 'புத்தொழில் களம்' நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர், மாவட்டத்தில் சேரும் மின்னணு கழிவுகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்யச் 'சூழல் சிங்கம்' என்ற அமைப்பை நிறுவியுள்ளனர். இத் திட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாநகராட்சிப் பகுதி பொதுமக்களிடம் இருந்து மின்னணு கழிவுகளைப் பெறவும் வஉசி கல்லூரியில் சிறப்புத் தொடக்க விழா நடைபெற்றது. இதில் 'பாரி - ஈ பின்' அமைப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய கனிமொழி எம்பி, பிளாஸ்டிக் கழிவுகள் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். 

மரங்களை வெட்டுவது, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், கடற்கரையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால் காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தீவிரமடைந்துள்ளன எனத் தெரிவித்தார். நவீன சாதனங்களைக் குறைந்த காலம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலமே மின்னணு கழிவுகளைக் குறைத்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

இத் தொடக்க விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு, சூழல் சிங்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஷ்னோரா பலருடன் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory