» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியக் கடன்கள் வழங்குதல் தொடர்பான வட்டார அளவிலான சிறப்பு ஊக்குவிப்பு முகாம்கள் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 20 வரை பல்வேறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளன.
முகாம் நடைபெறும் அட்டவணை (பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை):
ஜூலை 14: சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஜூலை 16: புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஜூலை 21: உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஜூலை 23: விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஜூலை 28: திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஆகஸ்ட் 06: கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஆகஸ்ட் 11: ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஆகஸ்ட் 13: ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஆகஸ்ட் 18: கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஆகஸ்ட் 20: ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
திட்டங்களும் மானிய விபரங்களும்:
இச்சிறப்பு நேரடி நேர்காணல் முகாம்களில் கீழ்க்கண்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
TWEES (தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்): மகளிருக்கான உற்பத்தி, சேவை, வியாபார நிறுவனங்களுக்கு 25% மானியம்.
KKT (கலைஞர் கைவினைத் திட்டம்): கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய 25% மானியம்.
UYEGP (வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்): வியாபார நிறுவனங்களுக்கு 25% மானியம்.
NEEDS (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்): புதிய உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 25% மானியம்.
AABCS (அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்): ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உற்பத்தி, சேவை, வியாபார நிறுவனங்களுக்கு 35% மானியம்.
PMEGP (பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்): உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 15% முதல் 35% வரை மானியம்.
PMFME (பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்): உணவு பொருள் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு 35% மானியம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் முனைவோர்கள் பொதுவான அடையாள ஆவணம், பான் கார்டு, வங்கிப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC), திட்ட முதலீட்டிற்கான விலைப்புள்ளிப் பட்டியல் (Quotation) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
புதியதாகத் தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற விரும்புபவர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம். கூடுதல் விபரங்களுக்கு 0461-2340152 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காங்கிரஸ் அமைச்சரை விடுவிக்கத் தவெக அரசு தயாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
வியாழன் 9, ஜூலை 2026 4:53:50 PM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
வியாழன் 9, ஜூலை 2026 3:33:15 PM (IST)

கரூரில் நாளை முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
வியாழன் 9, ஜூலை 2026 3:18:55 PM (IST)

சாதிச் சான்றிதழ் அரசாணை ரத்துக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
வியாழன் 9, ஜூலை 2026 12:19:45 PM (IST)

கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடுவது கட்டாயம்: உயர் நீதிமன்றம் அதிரடி!
வியாழன் 9, ஜூலை 2026 11:56:54 AM (IST)


