» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!

வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)

AavinTvlColleti.jpg

ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள ஆவின் தலைமை அலுவலகம் மற்றும் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) தலைமை அலுவலகம் மற்றும் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தொழிற்சாலைக்கு விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பாலின் தரப்பரிசோதனை, குளிரூட்டும் வசதிகள், பால்பதப்படுத்தும் நடைமுறைகள், தானியங்கி இயந்திரங்களின் செயல்பாடு, பால் பாக்கெட் நிரப்புதல், சீல் செய்யும் முறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும், பால், பால் உபபொருட்கள் தயாரிப்பு, பேக்கிங், குளிர்பதன சேமிப்பு, விநியோகத்திற்கான ஏற்பாடுகள், இயந்திரப் பராமரிப்பு, தடையற்ற உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதைப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்வது குறித்துச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அனைத்துப் பிரிவு அலுவலர்களிடமும் தற்போதைய பண்ணை நிலவரங்கள், ஆவின் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், தொழிற்சாலையில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி அனைத்துக் கண்காணிப்புப் பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். அரசு நிர்ணயித்துள்ள தரநிலைகள், அளவுகளுக்கு ஏற்ப மட்டுமே பாலை உற்பத்தி செய்து, தரமான பால், பால் உபபொருட்களை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், விற்பனையை அதிகரித்துத் திருநெல்வேலி ஆவின் ஒன்றியத்தை லாபகரமாகச் செயல்படும் நிறுவனமாக மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, துணைப் பதிவாளர் (பால்வளம்) இரா.சுரேஷ், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) பொது மேலாளர் இரா.பாசு, உதவி பொது மேலாளர் (பண்ணை), உதவி பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் உள்ளீடு), மேலாளர் (விற்பனை), மேலாளர் (நிதி), மேலாளர் (பொறியியல்) உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory