» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 10:48:41 AM (IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தலா ரூ.50 கோடிக்கு விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பெருங்குடியில் நடைபெற்ற மாணவர் விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின்னர், அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.50 கோடி கொடுத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவும், வாக்காளர்களுக்கு தலா ரூ.2000 கொடுத்து மக்களின் தீர்ப்பைப் பண பலத்தால் மாற்றவும் முயற்சிக்கிறார். இதனைப் பொதுமக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.மேலும், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்து வருவதாக அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். "இன்னும் 30 நாட்களில் ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் எந்த நம்பிக்கையில் பேசினார்? தவெக எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசியுள்ளார்" என்று அமைச்சர் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினும், அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியும் அந்தந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் மன்றத்தைத் தவிர தாங்கள் வேறு யாருக்கும், எதற்கும் பயப்படத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த நேர்காணல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இபிஎஸ் தலைமையில் அதிமுக தள்ளாடுகிறது: தவெகவில் இணைந்த விஜய பாஸ்கர் பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 5:06:22 PM (IST)

திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 2, ஜூலை 2026 4:14:27 PM (IST)

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பெரிய ஓட்டை: வாகன ஓட்டிகள் அச்சம்!
வியாழன் 2, ஜூலை 2026 3:24:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு!
வியாழன் 2, ஜூலை 2026 12:34:29 PM (IST)

தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க திமுக சதி : ஸ்டாலின் மீது சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 12:23:48 PM (IST)

ஸ்பா சென்டர் நடத்த ரூ.20,000 மாமூல் வாங்கிய 2 பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது!
வியாழன் 2, ஜூலை 2026 12:13:36 PM (IST)


