» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்வாரிய பணியிட நியமனங்களில் குளறுபடி: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
திங்கள் 29, ஜூன் 2026 4:47:49 PM (IST)
தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களில் ஏற்பட்டுள்ள வயது வரம்பு குளறுபடிகளைத் தீர்க்கத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தளர்வு வழங்க வேண்டும் என்று 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு, பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2022 இல் இத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை சார்பான தேர்வுகள் மூலம் அப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக இப்பணிக்காகக் காத்திருந்த தகுதியான இளைஞர்கள் வயது வரம்புப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.வயது வரம்பில் தளர்வு கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உதவி மின் பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட, பணி நியமனக் கலந்தாய்வு தொடங்கும் முன்பாக வயது வரம்பைக் காரணம் காட்டித் தகுதி நீக்கம் செய்துள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி அமைப்பின் நிர்வாகக் குளறுபடியைக் காட்டுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குத் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியிருந்தது. அதேபோல, கடந்த 2013 ஆம் ஆண்டிலும் நீண்ட காலம் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில் ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை மின்சார வாரியம் வழங்கிய வரலாறு உள்ளது. எனவே, நிர்வாகத் தாமதங்களால் பாதிக்கப்பட்ட தகுதியான இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய வயது வரம்புத் தளர்வை வழங்க வேண்டும் என்று அண்ணாமலை தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)

லஞ்சம், ஊழலற்ற நிர்வாகம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் அறிவுறுத்தல்!
திங்கள் 29, ஜூன் 2026 5:06:27 PM (IST)

நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
திங்கள் 29, ஜூன் 2026 4:26:44 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 29, ஜூன் 2026 4:06:11 PM (IST)

தூத்துக்குடியில் சூறாவளிக் காற்றுக்கு அரசமரம் சாய்ந்தது: பொதுமக்கள் உயிர் தப்பினர்!
திங்கள் 29, ஜூன் 2026 3:12:41 PM (IST)

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: திமுகவினர் தயாராக இருக்க ஸ்டாலின் அழைப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 12:06:34 PM (IST)


