» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்: கட்சித் தலைமை அறிவிப்பு!

சனி 27, ஜூன் 2026 5:19:48 PM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் தோல்வியைத் தழுவினார். இத்தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் செயல்பாடு குறித்து டெல்லி தலைமை அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.

தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றி கழக (தவெக) அரசுக்கு ஆதரவு அளித்ததுடன் அமைச்சரவையிலும் இடம்பெற்றது. முன்னதாக, தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு தரப்பு நிலைப்பாடுகள் நிலவின.

முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் தொடர்வதையே விரும்பியதாகவும், ஆனால் டெல்லி தலைமை அதற்கு நேர் எதிரான அரசியல் முடிவை எடுத்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது குறித்து விமர்சனம் செய்து வந்த திமுக தரப்பிற்கு, மாணிக்கம் தாகூர் தொடர்ந்து அரசியல் ரீதியாகக் கருத்துக்களை முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory