» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் மீது நடவடிக்கை : நயினார் நாகேந்திரன் கோரிக்கை!
சனி 27, ஜூன் 2026 3:54:12 PM (IST)
தமிழக வெற்றி கழக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டும், அதற்கு அவர் அளித்துள்ள தன்னிலை விளக்கமும் திருப்தியளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: "தவெக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத், பொதுவெளியில் போதைப்பொருள் உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர் கொடுத்துள்ள தன்னிலை விளக்கமும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது.சுமார் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, 'ஆன்டிபயாடிக்' உள்ளிட்ட வீரியமிக்க மருந்துகளையே மருத்துவர்கள் 'டானிக்' வடிவில் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த மருத்துவர் மாத்திரை கொடுத்தார்? அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் குழந்தையையும் காணவில்லை. உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கேயோ விட்டுவிட்டு, தந்தை ஜாலியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே மாத்திரையை நுணுக்கிக் கொண்டிருந்தாரா?
குறிப்பாக, குழந்தைக்குக் கொடுக்கும் மாத்திரையை, யாராவது போதைப் பொருள் போல கோடிழுத்துக் கொண்டிருப்பார்களா? மாத்திரையைக் கூட போதைப்பொருளைப் போலவே தயாரான மனநிலை கொண்டவர் எப்படி நிதானமாக மக்கள் சேவையாற்றுவார்?
இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும் இவ்விவகாரத்தை, முதலமைச்சர் விஜய் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்: கட்சித் தலைமை அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 5:19:48 PM (IST)

பள்ளி அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறாது: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
சனி 27, ஜூன் 2026 4:34:36 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 4¾ பவுன் தங்க நகைகள் திருட்டு - வாலிபர் கைது!
சனி 27, ஜூன் 2026 4:07:34 PM (IST)

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் இறுதிப் பயணம் : தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 12:46:05 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவு: பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்த 2 எம்எல்ஏக்கள்
சனி 27, ஜூன் 2026 12:40:00 PM (IST)

அமைச்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் - கீதாஜீவன் பரபரப்பு பேட்டி
சனி 27, ஜூன் 2026 12:18:08 PM (IST)
_1782541937.jpg)

