» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : அமைச்சர் மதன் ராஜா துவக்கி வைத்தார்

வெள்ளி 26, ஜூன் 2026 10:14:28 AM (IST)



தூத்துக்குடியில் ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா  கொடியசைத்து துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று 26.06.2026, தமிழ்நாட்டை "போதை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்" என்ற கருப்பொருளை வலியுறுத்தி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற "ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்" விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா , மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்,   தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும்  முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் தீய விளைவுகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகம் என்ற செய்தியை வலுப்படுத்தவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ’’START RUN, STOP DRUGS – ANTI DRUG RUN 2026” மாரத்தான் போட்டியானது இன்றையதினம் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்திலிருந்து தொடங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டை "போதை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்" என்ற கருப்பொருளை வலியுறுத்தி "ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்" விழிப்புணர்வு உறுதிமொழியினை  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா  முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்,   தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு மாராத்தான் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைந்தனர். 14 வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பலர் போட்டியில் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் டி-சார்ட் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்  சி.ப்ரியங்கா,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயரத்தினராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் செல்வி அனுசியா, பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory