» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!

வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யக் கோரப்பட்டிருந்த டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள முக்கிய 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவது மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு (Feasibility Study) செய்வதற்காக, தமிழ்நாடு அரசு சமீபத்தில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) ஒன்றைக் கோரியிருந்தது. அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் முயற்சிக்குத் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர் சங்க அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இந்தத் தனியார்மயமாக்கல் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று முதல்வர் விஜய்யை நேரில் வலியுறுத்தி வந்தனர்.

தொழிலாளர்களின் தொடர் எதிர்ப்பையும், அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்விற்காக வெளியிடப்பட்டிருந்த டெண்டரை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory