» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க ஆட்சி குறித்து 3 மாதங்களில் வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள்: பாஜக சாடல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:12:44 AM (IST)

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் த.வெ.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் எனப் பாஜக பிரசாரப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் மற்றும் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் பிரசாரப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியராஜ் கலந்துகொண்டு பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டியராஜ் கூறியதாவது: "தற்போதைய முதலமைச்சர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது. த.வெ.க எம்எல்ஏ மீது கடுமையான குற்றச்சாட்டைத் தெரிவித்துப் பெண் ஒருவர் வீதி வீதியாக அலைந்து வருகிறார். இதுகுறித்து முதலமைச்சர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
முதலமைச்சர் விஜய் திரைப்படங்களில் டப்பிங் பேசி நடித்து வெற்றி பெற்றவர். அவர், தற்போது 'டப்பிங் திமுக'-வின் முதலமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். திமுகவின் இரண்டாவது பாகமாக தான் த.வெ.க உள்ளது. கடந்த ஆட்சியில் திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான், இன்று த.வெ.க ஆட்சியில் அமரக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால், இந்த மோசமான ஆட்சியால் அடுத்த 3 மாதங்களிலேயே த.வெ.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள்" என்று அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் சேதுராஜ், வேல்ராஜா, வீரமணி, நகரத் தலைவர் காளிதாஸ், ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சண்முகராஜ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியை உலுக்கிய டொர்னடோ சுழல்காற்று: நடந்தது என்ன? ஆய்வாளர் விளக்கம்!
திங்கள் 22, ஜூன் 2026 12:05:19 PM (IST)

மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு : உயிரிழப்பு 5ஆக உயர்வு!
திங்கள் 22, ஜூன் 2026 8:25:35 AM (IST)

தூத்துக்குடியில் திடீர் சூறாவறளிக் காற்று: விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:23:31 PM (IST)

திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு
ஞாயிறு 21, ஜூன் 2026 9:08:48 AM (IST)

கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்குகள் : 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:55:35 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பாரதிய ஜனதா ஆயத்தம் : தூத்துக்குடியில் நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:47:19 AM (IST)



அதுJun 16, 2026 - 08:24:24 AM | Posted IP 162.1*****